இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு
பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராயபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறு; 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடே திரும்பி பார்க்கும் வகையில் கல்விக்கொள்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பது அரசின் கொள்கையாக உள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 7,500 பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். +2 முடிந்தவுடன் மாணவ - மாணவிகளுக்கு சிஏ தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். இருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.65 லட்சம் மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது கிடையாது, விருதுக்கான 17 விதிமுறைகளை வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...