இன்று (26-06-2019) சென்னை பள்ளி
கல்வித்துறை வளாகத்தில் இருக்கும் தமிழக "ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (TRB
Board)" ஆன்லைன் முறையில் பல முறைகேடுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(23-06-2019) நடைபெற்ற "கணினி பயிற்றுநர் TRB தேர்வை" ரத்து செய்யக்கோரி
கணினி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் போராட்டத்திற்கு போலிசார் அனுமதி மறுத்தனர்.
பின்னர்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் "தலைவரிடம்" கணினி ஆசிரியர்கள் குழுவாக
சென்று கோரிக்கை மனுவை அளித்து "Online முறையில் நடைபெற்ற இந்த தேர்வின்
அனைத்து குளறுபடிகளையும் விளக்கிக் கூறி அதனை மனுவாக அளித்தனர்"
தேர்வுக்காக
வகுக்கப்பட்ட 10.00 -to- 1.00 என்ற தேர்வு நேரத்தை மீறி 2.00 மணி... 4.00
மணி... மற்றும் இரவு 8.00 மணி வரையில் தேர்வு நடைபெற்றதற்கான ஆதாரங்களை
அவரிடம் சமர்ப்பித்தனர். 3 தேர்வு மையங்களுக்கு மட்டுமே மறு-தேர்வு
நடத்தப்படுகிறது; ஆனால் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில்
சர்வர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து சில தேர்வு மையங்களில் இரவு 8.00 மணி வரை
தேர்வு நடைபெற்றது.
இதனால்
காலை 10.00 முதல் 1.00 மணி வரை தேர்வெழுதியவர்களிடம் மாலை 2.00 மணி...
4.00 மணிக்கு தேர்வெழுதியவர்கள் வினாத்தாளின் விடைகளை கேட்டறிந்து இந்த
தேர்வை எழுதியுள்ளனர். இது மாபெரும் முறைகேடாகும்..!!
மேலும்,
தேர்வுக்கான வினாத்தாளை தேர்வர்களிடம் வழங்க TRB எந்தவொரு நடவடிக்கையும்
எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்
விடைக்குறியீடு (Answers Key) வெளியிடப்பட்டால் நாங்கள் எழுதிய விடைகளை
எவ்வாறு? சரிபார்ப்பது எனவும், ஆசிரியர் தகுதித்தேர்வின் விதிகள் இந்த
தேர்வில் பின்பற்றப்படாததால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென TRB
தலைவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த
மனுவை படித்துப்பார்த்த TRB-யின் 'தலைவர்' தேர்வு மையங்களின் "CCTV"
பதிவுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
உறுதியளித்துள்ளார்.
உரிய
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து கணினி பட்டதாரிகளும்
நீதிமன்றங்களில் தனித்தனியாக வழக்கு தொடரவும்... குடும்பத்துடன் போராட்டம்
செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
East or west Seniority is best.. Exam and all very worst
ReplyDelete