தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 8) தொடங்க உள்ள
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாளை 1
லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி
வருகிறது. அதேபோன்று 23.8.2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற முதல் தாள் தேர்வையும், 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது.
இன்று தேர்வு: அதன்படி, சனிக்கிழமை (ஜூன் 8) முதல் தாள் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளன. இரு தேர்வுகளும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணிக்கு முடிவடையும். தேர்வின் மொத்த மதிப்பெண் 150 என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...