டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில்,
24 கேள்வி தவறானது என டிஎன்பிஎஸ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற்றது.
24 கேள்வி தவறானது என டிஎன்பிஎஸ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற்றது.
இதில்
ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான முடிவுகள் ஏப்ரலில்
வெளியானது। இது தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 18 விடைகள் தவறானவை
என புகார் எழுந்தது.இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என கோரிக்கை டிஎன்பிஎஸ்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த
கோரிக்கைகளை டிஎன்பிஎஸ்சி ஏற்காமல் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் நிலை
முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
இது
குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, கேட்கப்பட்ட கேள்விகளில் 20 கேள்விகள்
தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக
பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என டிஎன்பிஎஸ்சி சார்பில்
கேட்கப்பட்டது.
இதற்கு
கடுமையாக கண்டனம் தெரிவிதித்த நீதிபதி மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப்-1
தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதையெல்லாம் அனுமதிக்க முடியாது என
எச்சரித்துள்ளார். ஜூன் 17ஆம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்யக் கோரி
உத்தரவிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...