Thanks to-Mr.Alla Baksh
முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வு வர வாய்ப்பு இருக்கிறதாஇல்லையா என்று யோசித்துகொண்டு இருக்கும் போதுதேர்வு அறிவிப்பு வந்துவிட்டது.
நம்பிக்கையோடு தேர்வுக்குஎப்படி தயார் ஆவது என்பதைபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வானது 150மதிப்பெண்களை கொண்டது.
150 மதிப்பெண்களில் 110மதிப்பெண்கள் உங்கள் பாடசம்பந்தமான கேள்விகளைகொண்டு இருக்கும். மீதம் உள்ள40 மதிப்பெண்களில் 30கேள்விகள் சைக்காலஜி மற்றும்கல்வியியல் சம்பந்தப்பட்டவை.இன்னும் இருக்கும் 10மதிப்பெண்கள் பொது அறிவுசம்பந்தமானவை.
தேர்வை பற்றி பார்த்தோம்.இனி பாடத்திட்டம் பற்றிபார்ப்போம்.
கீழ்காணும் லிங்கைபயன்படுத்தி தேர்வுக்கானபாடத்திட்டத்தை பதிவிறக்கம்செய்து கொள்ளுங்கள்.
(பழைய லிங்க் தான்) ஓபன்ஆகவில்லை எனில் தனியாகsyllabus பதிவை பதிவிடுகிறேன்.
பாடத்திட்டம் பதிவிறக்கம்செய்த பிறகு உங்கள்பாடத்துக்கு ஏற்றவாறுபுத்தகங்களை தேடி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்தேர்வுக்கு பள்ளி புத்தகம் முதல்இளநிலை மற்றும் முதுகலைபுத்தகங்கள்அனைத்தும்(உங்கள் முக்கியபாட சம்பந்தமானவை) தேவை.
பாடத்திட்டம் பதிவிறக்கம்செய்தாகிவிட்டது. புத்தகங்கள்எடுத்து வைத்தாகிவிட்டது.அடுத்து என்ன செய்யவேண்டும் என்றுகேட்கிறிர்களா…
பாடதிட்டத்தில் உங்கள் மேஜர்(major subject) பாடமானது பத்துUnit ஆக இருந்தால் அதற்கு ஏற்பபத்து நோட்டுகளைவாங்குங்கள். பாடத்திட்டத்தில்முதல் யூனிட்டில் முதல்தலைப்பை பாருங்கள். அந்ததலைப்பு ஆறாம் வகுப்பு முதல்முதுகலை பட்டப்படிப்பு வரைஇருப்பின் அந்த தலைப்பில்புத்தகங்களில் உள்ளகுறிப்புகளை எடுத்து உங்கள்நோட்களில் எழுதி வைத்துகொள்ளுங்கள். இப்படியேஅனைத்து யூனிட்களுக்கும்குறிப்புகள் எடுத்து வாருங்கள்.இப்படி எடுக்கப்படும் குறிப்புகள்தேர்வு நெருங்கும் நேரத்தில்மீண்டும் திருப்புதல் செய்யவும்மற்றும் எளிதாக நினைவில்நிறுத்தவும் உதவும். மேலும்குறிப்பட்ட தலைப்பைஇணையத்தில் தேடி அதில்இருந்தும் குறிப்புகளை எடுத்துகொள்ளுங்கள்.
உங்களிடம் போதுமானபுத்தகங்கள் இல்லையா…கவலையே வேண்டாம். உங்கள்மாவட்ட பொது நூலகங்களைநாடுங்கள். அங்கு அனைத்துவிதமான புத்தகங்களும்கிடைக்கும். அவற்றில் இருந்துமுக்கிய பகுதிகளை நகல்எடுத்து கொள்ளலாம்.
இப்படி தரமான பாடகுறிப்புகளை நீங்களே தயார்செய்து படிப்பது உங்கள்நினைவாற்றலைஅதிகரிப்பதுடன், அதிகமதிப்பெண்களை பெறவும்உதவும்.
என்றும் உங்கள்
Alla Baksh
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...