புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண
ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் இந்தி மொழியை திணிக்கக் கூடாது
என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் அருணன்
மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை, புதிதாக மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் போகிரியாலிடம்வழங்கியுள்ளது.புதிய வரைவு அறிக்கையில் மும்மொழி கொள்கை அடிப்படையில் மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர்.
வரைவு அறிக்கைக் மீது பொதுமக்கள் ஜூன் 30ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து கால நீட்டிப்பு வழங்க வேண்டும். இந்தி மொழியை விரும்பாத மாநில மக்களின் கருத்தைகேட்டறிந்து, ஆட்சேபனை இருந்தால் அந்தந்த மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் இருமொழி கொள்கையை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் அருணன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...