திண்டுக்கல்:அரசு தேர்வுத்துறையின் பணிகளை எளிமைப்படுத்த மாவட்டங்களில்
அமைக்கப்பட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகள்
தேக்கம் அடைந்துள்ளன.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தேர்வுத் துறை தமிழகத்தில் 7
மண்டலங்களாக செயல்பட்டது. கடந்த 9 மாதங்களுக்கு முன் இதன் நிர்வாகம் மாற்றி
அமைக்கப்பட்டு, 32 மாவட்டங்களிலும் மாவட்ட அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன.
அதன் பின் 10, பிளஸ் 1, பிளஸ்2 பொதுத் தேர்வுகள் நடத்தி முடிவுகளும்
அறிவிக்கப்பட்டன.காலியிடங்கள்தொடர்ந்து உடனடி மறுதேர்வு, ஆசிரியர்
பயிற்சித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. இத்தனை பணிகள்
முடிந்தும், மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 14ல்தான் தேர்வுத் துறை
அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 18 ல் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் பல மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளே செயல்படுகின்றனர். மேலும்
சென்னையில் உள்ள 8 துணை இயக்குனர் பணியிடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன.
இருக்கும் இருவரில் ஒருவர் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.புலம்பும் ஊழியர்கள்
இதனால் தேர்வுத்துறை நிர்வாகத்தை மாற்றி அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறாமல்
உள்ளது. இப்பணியில் கல்வித்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தி செயல்படுத்த
வேண்டியுள்ளது.
ஏற்கனவே கல்வித்துறையில் பல்வேறு பயிற்சிகள், நலத்திட்டங்கள் என பணிப்பளு
அதிகரித்துள்ள நிலையில் தேர்வுத்துறை பணிகளும் கூடுதல் சுமையாக உள்ளதாக
மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள், ஊழியர்கள் புலம்புகின்றனர்.தேர்வுத் துறை
பணிநியமனம் பற்றி இயக்குனரோ, கல்வித்துறை செயலரோ கண்டுகொள்ளவில்லை. புதிய
கல்வி ஆண்டில் பள்ளிகள் துவங்கிவிட்டன. விரைவில் பொதுத் தேர்வுக்கான பணிகளை
துவக்க வேண்டும். எனவே மாவட்ட தேர்வுத்துறை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...