உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து
அங்கன்வாடிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று பணியை
தொடங்கி, மாணவர்சேர்க்கையை துரிதப்படுத்த தொடக்கக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மழலையர் வகுப்புகள் தொடங்க அரசு
முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப் பள்ளி
வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் கடந்த
கல்வியாண்டில் தொடங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி
தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் குழந்தைகளை சேர்த்தனர்.உயர்
நீதிமன்றத்தில் வழக்குஇந்த மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த தொடக்கப்
பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை
எதிர்த்து ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆசிரியர்கள் பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், வகுப்புகள்
நடைபெறுவது தடைபட்டு மையங்களில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகளே
தொடர்ந்தன.இதனால் பெற்றோர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில்
விசாரணையின் முடிவில் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால்
மழலையர் வகுப்புகளில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பள்ளி
திறக்கும் நாளில் பணியில் சேர தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு
வெளியிட்டது. அதன்படிமாநிலம் முழுவதும் கோடைவிடுமுறை முடிந்து
பள்ளிகள்இன்று திறக்கப்படுகின்றன. இயக்குநரகம் சுற்றறிக்கைஇதையடுத்து
மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அவரவருக்கு
ஒதுக்கப்பட்ட பள்ளியில் இன்று பணியில் சேர இருக்கின்றனர். அதன்படி
இடமாற்றம் செய்யப்பட்ட எல்லாஆசிரியர்களும் பணியில் சேருவதை உறுதி செய்து,
மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக்
கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில்,
‘மழலையர் வகுப்புகளில் சேர்க்கை நடைபெறுவது குறித்து விளம்பர பலகை மூலம்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வட்டாரக் கல்வி
அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை
மற்றும் அதன்செயல்பாடு குறித்து வாரம்தோறும் நேரடியாக ஆய்வு செய்து
அறிக்கைதர வேண்டும்’’என்று கூறப்பட் டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...