குரோம்பேட்டையில் உள்ள
தனியார் பள்ளி ஒன்று வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் என அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வரும் 24-ஆம் தேதி முதல் அரை நாள்தான் இயங்கும் எனஅறிவித்துள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுத்திருப்பதாக அப்பள்ளி பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் கழிவறைகளைபராமரிக்க தண்ணீர் இல்லாத சூழலில் இத்தகைய முடிவை எடுக்க வேண்டி உள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல தனியார்பள்ளிகள், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன.
முன்னதாக கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நேற்றும், இன்றும் பள்ளிக்குவிடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...