அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள், அவர்களின் கல்வித்தகுதி தொடர்பாக இன்றைக்குள் பட்டியல் சமர்ப்பிக்குமாறு உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பிற பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:தமிழக அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள்/ கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியரின் பெயர், பணியாற்றும் துறை, செட் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளாரா, முனைவர் பட்டம் பெற்றுள்ளாரா, எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை வைத்து பட்டியல் தயாரித்து ஜூன் 14ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
இவ்வாறு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பட்டியலை சமர்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்
Also review regular assistant professor's PhD .....
ReplyDelete