தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள்
காத்திருந்த மாணவர்களுக்கு, கல்வித்துறை உத்தரவால் இலவச லேப்டாப்கள்
கிடைக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும்
இருந்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் பிளஸ் 1க்கும்
நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின் அடுத்த
கல்வியாண்டில் தான் மாணவருக்கு லேப்டாப் வினியோகிப்படும். அந்த வகையில்
2017 - 18ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் தற்போது கல்லுாரிகளில் 2ம்
ஆண்டு படிக்கின்றனர்.இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட
லேப்டாப்களை, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கு வழங்க சிறப்பு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.அவர்கள் கூறுகையில்,
"இரண்டு ஆண்டு காத்திருந்தும் கிடைக்கவில்லை. எங்களுக்கு முன் மற்றும்
பின் படித்த அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கிடைத்துள்ளது. எங்களுக்கு
ஏன் மறுக்கப்பட்டுள்ளது" என்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு
கல்வியாண்டில், 2017 - 2018, 2018- 2019 மற்றும் 2019 - 2020 ஆகிய மூன்று
ஆண்டுகளுக்கும் சேர்த்து 15,53,359 லேப்டாப் ஒதுக்கப்பட்டன.பிளஸ் 1க்கும்
லேப்டாப் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது நீட், ஜே.இ.இ., சிலாட்
உள்ளிட்ட பல தேர்வுகளுக்காக அவர்கள் தயாராகி வருவதாலும் 2017 - 2018ம்
ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட லேப்டாப்களை அவர்களுக்கு வழங்க முடிவு
செய்யப்பட்டது, என்றார்.இதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து
மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லேப்டாப் வழங்குவது
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளதாக சர்ச்சை
எழுந்துள்ளது.
Public Exam 2025
Latest Updates
Home »
» சீனியருக்கு ஏமாற்றம்; ஜூனியருக்கு யோகம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...