தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை ஒரு
சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம்
தனியார் பள்ளிகளுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவுவாயிலில் கட்டண விபரத்தை காட்சிபடுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு.
அதில், கல்விக் கட்டண நிர்ணயக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கட்டணங்களை
பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் தவறும் பட்சத்தில்
சம்பந்தப்பட்ட பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரித்துள்ளது.
அண்மையில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கல்வி கட்டண குழு ஒவ்வொரு
வகுப்பிற்கும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.
இந்த கல்வி கட்டண விபரம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையதளத்திலும்,
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படுவதில்லை.
இதனால் கல்விக் கட்டண விபரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதை பயன்படுத்தி மெட்ரிக் பள்ளிகளில் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர்' என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனை ஏற்ற நீதிமன்றம் இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதி அளித்து வழக்கை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...