தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை
நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக் காலம் முடிந்தும்,
வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், தண்ணீர் பஞ்சம் கடும் பாதிப்புகளை
ஏற்படுத்தி உள்ளது. குடிநீரும், நிலத்தடி நீரும் இல்லாமல், மக்கள் கடும்
இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.சென்னை போன்ற பெருநகரங்களில், தண்ணீர்
தட்டுப்பாட்டால், பொது மக்கள், வீடுகளை காலி செய்யும் நிலை
ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்துமாறு, பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மத அடிப்படையில் இல்லாமல்,
பொதுவான பிரார்த்தனை கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.மேலும்,
இக்கூட்டங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு
குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி
எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...