தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு புதிய
பாடத் திட்டத்தின்படி இனி தேர்வுகள் நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பு: , 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1
வகுப்புக்கும், 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மார்ச் 2020 பருவம் முதல் நடத்தப்படும் 10, 11, 12- ஆம் வகுப்பு
பொதுத் தேர்வுகள் புதிய பாடத் திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். மார்ச்
2020 பருவம் முதல் பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்
தேர்வுகள் நடத்தப்படாது.
ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தேர்ச்சி பெறாத, வருகை புரியாத பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ், மார்ச் 2020 பருவம் முதல் நடைபெறும் தேர்வுகளில் எழுதிக் கொள்ளலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...