பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்:
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியாளர் எண்ணிக்கை 38.02 லட்சம் ஆகும். இதில் 2018, மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 31.18 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஊழியர்கள் ஓய்வுபெறுதல், பணிக் காலத்தில் மரணம் அடைதல்,பதவி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசின் துறைகளில் காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் உரிய தேர்வு நடைமுறைகளின் கீழ் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன.
பல்வேறு அமைச்சகங்களில் ஏற்பட்டுள்ள 1,03,266 காலிப் பணியிடங்களுக்கு 2019 மற்றும் 2020-ல் தேர்வு நடத்த மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) திட்டமிட்டுள்ளது. ரயில்வே வாரியம் 2018-19-ல் வேலைவாய்ப்புக்காக 5 அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படும் 1,56,138 காலிப் பணியிடங்களுக்கு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...