தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு,
செப்டம்பர், 1ல் போட்டி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.எட்டு வகை
பதவி'ஜூலை, 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; அதே மாதம், 16ம் தேதிக்குள்
தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இந்த தேர்வின் வழியாக, எட்டு வகை பதவிகள் நிரப்பப்பட உள்ளன.அதன் விபரம்:வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அதிகாரி, 397; பிணையமற்ற இளநிலை உதவியாளர், 2,688; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர், 104; வரி வசூலிப்பவர் நிலை - 1, 34 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன. நில அளவையாளர், 509; வரைவாளர், 74; தட்டச்சர், 1,901; சுருக்கெழுத்து தட்டச்சர், 784 என, 6,491 காலியிடங்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளன
இதில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, குறைந்த பட்சம், 20 ஆயிரத்து, 600 ரூபாய் முதல், 65 ஆயிரத்து, 500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பதவிகளுக்கு, குறைந்த பட்சம், 19 ஆயிரத்து, 500 ரூபாய் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏமாற வேண்டாம்
தேர்வு அறிவிக்கையில், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை:டி.என்.பி.எஸ்.சி.,யின் நியமனங்கள் அனைத்தும், தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை கூறி, குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத் தரகர்களிடம், தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களால், தேர்வர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும், தேர்வாணையம் பொறுப்பாகாது.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும், அனைத்து தகவல்களுக்கும், விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பித்த இணையதள சேவை மையங்களையோ, பொது சேவை மையங்களையோ குறை கூறக்கூடாது. விண்ணப்பத்தை சரிபார்த்த பின் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...