சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில்
5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அங்கமான சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஏ எல்எல்பி, பிபிஏ எல்எல்பி,பிகாம் எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, ஆகிய 5 ஆண்டு கால ஹானர்ஸ் சட்டப்படிப்புகளில் சேர 3,191 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,747 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுதரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.தமிழக சட்டத்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சி.வி.சண்முகம், தரவரிசை பட்டியலில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறைச் செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம், சட்டக் கல்வி இயக்குநர்என்.எஸ்.சந்தோஷ்குமார், சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.சூர்யநாராயண சாஸ்திரி, பதிவாளர் (பொறுப்பு) ஆர்.விஜயலட்சுமி, தமிழ்நாடு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...