தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு ஜூன் 24-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும். அவர்களுக்குவரும் 28-ம் தேதி சேர்க்கை
ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: 2019-20-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இணைய தளம் மூலம் கடந்த10-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த விண்ணப் பப் பதிவு வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். இதையடுத்து சேர்க்கை ஆணை சம்பந்தபட்டவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி அனுப்பப்படும். சேர்க்கை ஆணையின் நகல் தேவைப்படு வோர் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...