நல்லம்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, வகுப்பறைக்கு ரயில் பெட்டி போன்று பெயிண்டிங் செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2005ம் ஆண்டு முதல், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அவர்களை 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேர்த்து கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சீட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இப்பள்ளியில், தற்போது 50 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தாண்டு, பள்ளி தொடங்குவதற்கு முன்பு, முன்மாதிரி பள்ளியாக்கும் வகையில், பள்ளிக்கு ரயில் பெட்டி வடிவில் வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு படங்கள் வரையப்பட்டுள்ளது. இதையறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் பள்ளி நிர்வாகி சரவணனை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
பள்ளிக்கு அருகே வசிக்கும் நல்லம்பள்ளி பகுதி மக்கள், ரயில் பெட்டி வரையப்பட்டுள்ள பள்ளி அறைகள் முன்பு, தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகி சரவணன் கூறுகையில், 'நல்லம்பள்ளியில் உள்ள உண்டு உறைவிட பள்ளி, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக, வகுப்பறை முகப்பில் ரயில் பெட்டி போன்று வர்ணம் பூசியுள்ளோம். இதன் மூலம் இங்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளிடையே உற்சாகம் ஏற்படுவதோடு, கல்வி கற்பதற்கும் ஆர்வத்தை தூண்டும்,' என்றார். பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த ரயில் பெட்டி போல பள்ளி வகுப்பறைக்கு 'பெயிண்டிங்'
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...