இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று விசாரணைக்கு ஏட்டியது
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு-WP 28558 இன்று இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கூடுதலாக ஒரு வழக்கறிஞர் இணைந்தார் (Impeled) நீதியரசர் நமது தரப்பில் முதலாவது வழக்கு தொடுத்த வழக்கறிஞரிடம் இவர்கள் இணைவதால் உங்களுக்கு எதுவும் Objection உள்ளதா என்று வினவினார்கள் நமது தரப்பில் எந்த Objection இல்லை என்று கூறிவிட்டோம் அரசு தரப்பில் கேட்டபொழுது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் வேறு யாரும் நுழைய கூடாது என மறுப்பு தெரிவித்தார்.
புதிய வழக்கறிஞர்கள் தரப்பில் இந்த வழக்கில் எங்களுக்கு என்று தனியாக பதில் மனு (Counter File) எதுவும் தாக்கல் செய்ய வேண்டாம் முன்னர் தாக்கல் செய்த பதில் மனுவில் வைத்து நாங்கள் விசாரணையை நடத்தி கொள்கிறோம். மேலும் மனுதாரருக்கு சார்பாகவே விசாரணைக்கு வந்துள்ளோம் ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டனர் அதனைக் கேட்ட நீதியரசர் புதிய வழக்கறிஞரை அனுமதித்து வழக்கு விசாரணை வரும் 14.6.2019 அன்று இறுதி கட்ட விசாரணை நடைபெறும் என்றும் வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.
நாளை மறுநாள் 01.05.2019 முதல் 3.6.2019 வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை,அதன்பின்பு மீண்டும் வழக்கம்போல் நீதிமன்றம் செயல்படத் துவங்கும் பொழுது நமது தரப்பிலான இறுதி கட்ட விசாரணை 14.06.2019 அன்று நடைபெறும்.
நமக்கு சாதகமாக தான் வழக்கு சென்று கொண்டிருக்கிறது நீதிமன்றத்தில் நாட்களும்,காலமும் குறிப்பிட முடியாது ஆனால் வழக்கில் காலதாமதம் ஏற்படுத்தும் அனைத்து சட்டஅணுகுமுறைகள் முடிவடைந்ததால் மிக விரைவாகவே வழக்கு முடிவடையும்.
தகவல் பகிர்வு
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...