'பத்தாம் வகுப்பு சான்றிதழில்,
பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கப்படும்'என, எச்சரிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுத் துறை இணை இயக்குனர், அமுதவல்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சான்றிதழ்களில், எந்த பிழையும் ஏற்படக் கூடாது என்பதற்கு, தேர்வுத் துறை பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் பெயர், 'இனிஷியல்'மற்றும் பிறந்த தேதி, பயிற்று மொழி, புகைப்படம், பள்ளியின் பெயர் போன்றவற்றை பதிவிடவும், அவற்றில் பிழைகளை திருத்தவும், அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனாலும், சான்றிதழ்களில் பிழைகள் தொடர்கின்றன.
இந்த முறை, தேர்வு முடிவுகள் வெளியான நிலையிலும், பிழைகளை திருத்துவதற்கு, இன்னும் ஒரு அவகாசம் தரப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், டி.இ.ஓ.,க்கள் ஆகியோர், நாளைக்குள், பிழைகளை திருத்தி, இறுதி பட்டியலை, தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கு பின்னரும், பிழைகள் இருப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் டி.இ.ஓ.,க்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...