புயல், மழை, வெயில் என, இயற்கை பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கையை அறிந்து கொள்ள, ஒவ்வொருவரும், 'TN- SMART' என்ற மொபைல் ஆப் வைத்துக்கொள்ள வேண்டும் என, வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசின் வருவாய்த்துறையுடன், பேரிடர் மேலாண்மை பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் தோறும், பேரிடர் மேலாண்மை பிரிவு, தாசில்தார் தலைமையில் இயங்கி வருகிறது.மத்திய, மாநில அரசுகள், வானிலை ஆய்வு மையங்களில் இருந்து வெளியாகும், அறிவிப்புகளை பெற்று, முன்னெச்சரிக்கை செய்வது, இவர்களது முக்கிய பணி.புயல், மழை, வெப்பக்காற்று என, இயற்கை பேரிடர்குறித்து, முன்னறிவிப்பு வரும் போது, பேரிடர் மேலாண்மை பிரிவு, உரிய முன்னேற்பாடுகளை செய்கிறது. அரசு தரப்பில் இருந்து, நிமிட இடைவெளியில் அறிவிப்பு வெளியானாலும், அதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு, வருவாய்த்துறை வசம் உள்ளது.வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் பணிகளை எளிதாக்கவும், வினாடிக்கு விநாடி, தகவல்கள் மக்களை சென்றடையும், வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காகவே, 'TN- SMART' என்ற நவீன மொபைல் ஆப்பைவருவாய்த்துறை வடிவமைத்து, பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.அரசு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தனியாக தகவல் பரிமாறிக்கொண்டாலும், மக்களுக்காக இந்த 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம், உலகம் முழுவதும் நிகழும் பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிக்கும்.
வருவாய்த்துறையின், 'TN- SMART' என்ற மொபைல் ஆப், தாய்லாந்து சுனாமி எச்சரிக்கை மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், காலநிலை மாற்றம், பேரிடர் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், ஒவ்வொரு நபர்களையும் சென்றடைகிறது.
பட்டியல் அறிக்கையாகவோ, வரைபட 'மேப்' வாயிலாகவோ, மழை மற்றும் அனல்காற்று அறிவிப்புகளை பார்க்கலாம்.வருவாய்த்துறையினர் கூறியதாவது:பொதுமக்கள், 'வாட்ஸ் ஆப்'களில் வரும், அச்சுறுத்தும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கலெக்டர் மூலமாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும்.மக்கள் அச்சமின்றி, பேரிடர்களை சமாளிக்கவும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், புதிய 'மொபைல் ஆப்' தயாரிக்கப்பட்டுள்ளது.
'TN- SMART' என்ற மொபைல் ஆப்'பை, 'மொபைல்' போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.தங்களது மொபைல் போன் எண், 'இ-மெயில்' போன்ற தகவல்களுடன் பதிவு செய்துகொள்ளலாம்.இதன்மூலம், பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, இருக்கும் இடத்தில் இருந்தே, 'அப்டேட்' செய்துகொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...