தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வெயில் காரணமாக,
பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்
ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில்
அறிவுப்பு வெளியாகி இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி
எழுந்தது.
கொளுத்தும் வெயிலில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அதனால்
பள்ளி திறப்பதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களிலும்
ஏராளமானோர் அரசு வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதுபோல ஆசிரியர் சங்கங்கள்,
ஆசிரியர் பெற்றோர் கழகத்தினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக
கூறப்படு கிறது. மே இறுதி வாரத்தில் வர இருக்கும் பருவ நிலையைப் பொறுத்து
பள்ளிகள் திறக்கப்படும் தேதி முடிவு செய்யலாம் என அதிகாரிகள் மட்டத்தில்
முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரண மாக பள்ளிகள் திறப்பது ஜூன் 2-வது
வாரத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 நாள் லீவு விட்டு 15 நாட்கள் ஈடுகட்ட சொல்வது தான் அரசின் ஸ்டைல்!
ReplyDeleteschool opening date plz
ReplyDeleteRespected Sir
ReplyDeleteHeat increase irukku Thu
So school opening for June 2 week