தமிழகத்தில்
உள்ள தனியார் கல்லுாரிகளில், பெரும்பாலான உதவி மற்றும் இணை
பேராசிரியர்களுக்கு, போதுமான கல்வி தகுதி இல்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
பல கல்லுாரிகளில், 50 சதவீத பேராசிரியர்கள், பல்கலை மானிய குழுவான,
யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி, கல்வி தகுதி பெறவில்லை என, கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கு உட்பட்ட தனியார் கல்லுாரிகளில், மூன்றில்
இரண்டு பங்கு ஆசிரியர்கள், யு.ஜி.சி.,யின் கல்வி தகுதியான, பிஎச்.டி.,
மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய
வந்துள்ளது.இதையடுத்து, சென்னை பல்கலை சார்பில், அனைத்து
கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'உயர் நீதிமன்ற
உத்தரவுப்படி, அனைத்து கல்லுாரிகளிலும், யு.ஜி.சி., வகுத்த விதிகளின்படி,
சரியான கல்வி தகுதி உள்ள பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
கல்லுாரி நிர்வாகங்கள், இதுகுறித்து ஆய்வு செய்து, அந்தந்த பாட பிரிவுக்கு பொருத்தமான, கல்வி தகுதி உள்ள பேராசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...