Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் வீட்டில் தனியாகஇருக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்: பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய ஆலோசனைகள்

கோடை விடுமுறையில் வீட்டில் தனியாக
இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து டாக்டர் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பல வேளைகளில் தனியாக இருக்க வேண்டியுள்ளது.
தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் பிள்ளைகள் பெரும்பாலும் தனியாகவே இருக்கிறார்கள். இப்படித் தனியாக இருக்கும் பிள்ளை களின் அறியாமை செயல்கள், சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.
திருவான்மியூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில்வீட்டில் தனியாக இருந்த சகோ தரிகள், வீட்டில் இருந்த மரப்பெட்டிக் குள் இறங்கி விளையாட, மரப் பெட்டி தானாக பூட்டிக் கொண் டது. இதில் மூச்சடைத்து ஒரு சிறுமி பரிதாபமாக இறந்து விட்டார். மற் றொரு சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூரில் கடலில் குளித்து விளையாடியபோது 2 சிறுவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத் தில் பெற்றோர் இன்னும் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவங்கள் நம்மை எச்சரிக்கின்றன.
இதுகுறித்து பிரபல மருத்துவர் ஷைலஜா மற்றும் சில அனுபவம் வாய்ந்தவர்கள் கூறியதாவது:
குழந்தைகளுடன் பெற்றோர் விளையாட பழகிக் கொள்ள வேண் டும். வீட்டில் இருக்கும் ஆபத்தான விஷயங்கள் குறித்து முதலிலேயே குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.அறிமுகம் இல்லாதவர்கள் வந்தால் வீட்டுக் கதவைத் திறக்கக் கூடாது, கதவு ‘மேஜிக் ஐ’ வழியாகப் பார்த்த பின்னர் கதவைத் திறப்பது, எந்த ஒரு சம்பவத்தையும் பெற் றோருக்கு உடனேதொலைபேசி யில் தெரிவிப்பது போன்ற முன் னெச்சரிக்கைகளை சொல்லிக் கொடுத்து குழந்தைகளை பழக்கப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பானவர்களாக, நம்பிக் கைக்கு உரியவர்களாக இருந்தால் குழந்தைகளை அடிக்கடி பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். குறிப்பிட்ட இடைவெளியில் குழந் தைகளுடன் தொலைபேசியில் கட்டாயம் பேச வேண்டும்.தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் போன்ற வற்றை கண்காணிக்க வேண்டும். அதில் அவர்கள் ஏதாவது தவறு கள் செய்தால், அதை அமைதி யாக எடுத்துக்கூறி, அதன் ஆபத்துகளை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.விளையாடும்போது அடிபட் டால் அதை மறைக்காமல்பெற்றோரிடம் வந்து சொல்லும் அளவுக்கு, பெற் றோர் - குழந்தை உறவு பலமாக இருக்க வேண்டும்.இந்த விஷயத்தை பெற்றோரி டம் கூறினால் அவர்கள் அடிப்பார் கள், கோபப்படுவார்கள் என்ற சிந்தனையை குழந்தைகளின் மனதில் வளரவிடவே கூடாது.
வெளியுலகில் இருக்கும் ஆபத்து களை குழந்தைகளுக்கு தெரிவித்து, அதிலிருந்து காப்பாற்றிக் கொள் ளும் வழிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். நீர் நிலைகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களில் 99 சதவீதம் பேர்நீச்சல் தெரியாதவர்களே!இவ்வாறு அவர்கள் கூறினர்.
சில சம்பவங்கள்...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்ற வூரில் நண்பர்களுடன் குளத்துக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவன், சகதியில் சிக்கி விட்டார். பள்ளிக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்று அந்த மாணவனுடன் சென்ற நண் பர்கள் அவரை அப்படியே விட்டு விட்டு பள்ளிக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் சகதியில் மூழ்கி அந்த மாணவன் இறந்து விட்டார்.
நாகர்கோவிலில் மரத்தில் ஏறிய 5 வயது சிறுவன் கீழே இறங்காமல் தவிக்க, பெற்றோர் அடிப்பார்கள் என்று அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் பயத்தில் ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் மரத்திலேயே உட் கார்ந்திருந்த சிறுவனின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற நபர் சிறுவனை மீட்டிருக்கிறார்.
இந்த இரண்டு சம்பவங்களி லுமே உடனிருந்த நண்பர்கள் உடனே பெற்றோரிடமோ ஆசிரியர் களிடமோ தெரிவித்து இருந்தால், இருவரையும் சிறிது நேரத்தி லேயே மீட்டிருக்கலாம்.ஆனால், அவர்களுக்குள் இருந்த பயம் அதை வெளியே சொல்லவிடவில்லை. இப்படி ஒரு பயத்தை குழந்தை களின் மனதில் உருவாக்காமல் பார்த்துக் கொள்வது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் முக்கிய கடமை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive