சென்னை : இந்நிறுவனம் தற்போது ஸ்லிம் பிரேம் மாடல் டி.வி.க்களை அறிமுகம்
செய்துள்ளது. இ-சீரிஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்தப் பிரிவில் 32 அங்குலம்
முதல் 65 அங்குலம் வரையிலான டி.வி.க்கள் அறிமுகமாகின்றன.
ஸ்லிம் பிரேம், புல் ஸ்கிரீன் டிசைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த
வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது. 32 அங்குல டி.வி. இ32ஏ என்ற பெயரில்
வந்துள்ளது. இதன் விலை ரூ.11,400. 43 அங்குல எம்.ஐ. இ43ஏ மாடல் விலை
ரூ.20,700.
இதில் 55 அங்குல எம்.ஐ.இ55சி மாடல் விலை ரூ.31,100. பிரீமியம் மாடலாக 65
அங்குலத்தில் வந்துள்ள ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.41,500. இந்த இ-ரிஸ்
மாடல்கள் அனைத்திலும் ஜியோமி பாட்ச்வால் இயங்குதள செயல்பாடு கொண்டவை.
டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஹெச்.டி. உள்ளிட்டவை துல்லியமான இசையை அள்ளித்
தருகின்றன. 2 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம், 1.5 ஜிஹா ஹெர்ட்ஸ் பிராசஸர்
ஆகியன இதில் உள்ளன. வை-பை இணைப்பு வசதியும் கொண்டவை. புளூடூத் ரிமோட்
வசதியும் இதில் உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...