_நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல்
410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள
மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம்
நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
_
_ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு
திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு
மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள
பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம்
மாற்றப்பட்டுள்ளது._
_ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு
மதுரை நரிமேட்டில் உள்ள PT ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா
தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை
விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில்
அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம்
செய்யப்பட்டுள்ளது._
_ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு
மதுரை P&T எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது
தற்போது மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல்
பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது._
_ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு
மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு
மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது
நிறுத்தம் அருகேயுள்ள CS ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது._
_அதேபோல் ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை
உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண
நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு
மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு,
மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள SBOA பள்ளிக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளது._
தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை
தெரிந்துவைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. உங்கள் பகுதியில் யாரேனும்
மதுரை தேர்வு மையங்களில் தேர்வெழுதுபவராக இருந்தால் அவர்களுக்கு
தெரியப்படுத்தவும்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...