நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை தேசிய
தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5
நடைபெறவுள்ளது.
விதிமுறைகள்:
* தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 நடைபெறவுள்ளதால், தேர்வர்கள் பிற்பகல் 12 மணிக்கே தொடர்புடைய தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மைய கேட் மூடப்படும், அதற்கு பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் அனுமதி இல்லை; தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா தரப்படும்.
* மொபைல் போன், புளூடூத், பென்டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை.
* மென்மையான நிறத்தில் ஆடை அணிய வேண்டும்; மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி; முழுக்கை சட்டைக்கூடாது.
* தேர்வு மையத்துக்குள் ஷூ அணியக்கூடாது, செருப்பு மட்டும் அணியலாம்; குதி உயர்ந்த செருப்புகளை அணியக் கூடாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...