எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான
‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு மே 8 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தனது உறுப்புக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு தனி பொது நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாக கடந்த வாரம் திடீரென அறிவித்தது. இதனால், மற்ற கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்களும் குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில், உயர் கல்வித் துறையின் அறிவுரையை ஏற்று இதுவரை இருந்து வந்ததைப் போன்று அனைத்து கல்லூரி களுக்கும் சேர்த்து‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வு நடத்துவ தாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா 3 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. அதோடு ஏற்கெனவே வெளியிட்டி ருந்த தனி நுழைவுத் தேர்வுக்கானஅறிவிப்பை ரத்து செய் துள்ளது.
தமிழ்நாடு ‘டான்செட்’ செய லாளர் வெளியிட்ட புதிய அறிவிப் பின்படி, எம்சிஏ படிப்புக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு ஜூன் 22-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12மணி வரையிலும், எம்பிஏ நுழைவுத் தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை4.30 மணி வரையிலும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 23-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் நடைபெறும்.
இதற்கான ஆன்லைன் பதிவு மே 8-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடையும்.மாணவர்கள் www.annauniv.edu/tancet2019 என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி விட வேண்டும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...