தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து
ஒதுக்கப்பட்டு வேலைவாய்ப்பின்றி தவிக்கும் 60 ஆயிரம் கணினி அறிவியல் பி.எட்
பட்டதாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் 2011-12ம்
கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை
அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து.
இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை
அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டன.
இதனால் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல்
சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடக்க பள்ளிகளில்தான் கணினி அறிவியல்
பாடம் இல்லை. மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் உள்ளதால் அதில்
வேலைவாய்ப்பு கிடைக்கும் என கருதி கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள்
தங்களின் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு
பள்ளிகளில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கிடைக்கும் என
காத்திருக்கின்றனர். இன்று வரை வேலைவாய்ப்பு கிடைக்காமல் தமிழகம் முழுவதும்
சுமார் 60 ஆயிரம் கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் வேலையின்றி தவித்து
வரும் நிலை உள்ளது.
இதனிடையே மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஏற்படுத்திய புதிய கல்விக்கொள்கை காரணமாக ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும் என்ற நிர்பந்தத்தை
ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த புதிய நடைமுறையை தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு அமல்படுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணி என்பதை சட்டப்பூர்வமாக்கியது. இதில் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கணினி பி.எட் பட்டதாரிகள் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளிலும் கணினி பி.எட் பட்டதாரிகளுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட வில்லை. தமிழக அரசு தொடர்ந்து கணினி பட்டதாரிகளை வஞ்சிக்கும் விதமாக இதுவரை நடத்தப்பட்ட 3 தகுதி தேர்வுகளில் ஒதுக்கப்பட்டது மட்டுமின்றி, தற்போது நடைபெறும் தேர்வுகளிலும் ஒதுக்கி வைத்துள்ளது. இதுவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கணினி பி.எட் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
அரசு அதனை கவனத்தில் கொள்ளவில்லை
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரேசன் கூறியதாவது: கேரளாவில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் 6வது பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் அங்கு அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்திலும் அரசு பள்ளிகளில் 6வது பாடமாக கணினி அறிவியல் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்ைக வைத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...