ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 ரீசார்ஜை இலவசமாக வழங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆம் வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் செய்தி ஒன்று கூறுவதாவது, ஐ.பி.எல். 2019 போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஜியோ சார்பில் ரூ.399 சலுகை இலவசமாக வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட 20,000 ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. ஜியோ சார்பில் இது போன்ற தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற செய்திகளை நம்பி வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை போலி தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜியோவின்சலுகைகள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...