தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சார்பில் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா
சாவ்லா விருது ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விரிவான தன்விவரக் குறிப்பு, விரிவான விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினர் விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...