மனிதநேய அறக்கட்டளையின், மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., கல்வி மையம்
சென்னையில், செயல்படுகிறது. இந்த மையத்தில், மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி
அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள மாணவர்களை தேர்வு
செய்வதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், மே, 19ம் தேதி நுழைவுத் தேர்வு
நடத்தப்பட உள்ளது.நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு,
தங்கும் விடுதி, உணவு மற்றும் அனைத்து வசதிகளும், இலவசமாக வழங்கப்படும்.
நுழைவு
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.mntfreeias.com என்ற,
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மே, 10ம் தேதி கடைசி
நாள்.மேலும் விபரங்களுக்கு, 044 - 2435 8373, 2433 0095 என்ற எண்களை
தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மையத்தின் தலைவர், சைதை துரைசாமி
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...