Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NEET 2019: தோ்வா்களை தயாா் படுத்திக்கொள்ள எளிய வழிகள்




தேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ளது. பின்வரும் 6 விஷயங்களை நினைவில்கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் முதல் முயற்சியே வெற்றிதான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். 
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்கொண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில், 2019ம் ஆண்டு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தேர்வர்கள் https://www.nta.ac.in/  அல்லது https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கபட மாட்டார்கள். எனவே, குறித்த நேரத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொண்டு, தங்களுடைய சுய விபரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக்குத் தயாரிப்பதற்கு இன்னும் ஒரு மாதத்துக்குக் குறைவாகவே உள்ளது. பின்வரும் 6 விஷயங்களை நினைவில்கொண்டு, திட்டமிட்டு செயல்பட்டால் முதல் முயற்சியே வெற்றிதான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
1: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தனித்தனியாக ஒரு வாரம் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். அந்த ஒரு வாரத்தில் ஒரு பாடத்தை முழுமையாக ஒரு முறை திருப்பிப் பார்த்துவிட வேண்டும். பின் அடுத்த வாரம் இன்னொரு பாடத்தை இவ்வாறு திருப்பிப் பார்க்கலாம். இப்படி நேரம் ஒதுக்கி படிப்பது ஒரு பாடத்தை நிறைவு செய்ய போதிய வாய்ப்பு அளிக்கும்.
2: பகுதி பகுதியாக மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். இது நல்ல புரிதலுடன் தேர்வுக்குத் தயார் செய்ய சிறப்பான வழி. உதாரணமாக விலங்கினங்கள் பற்றிய பாடப் பகுதியை படித்து முடித்துவிட்டால், அதைப் பற்றி ஒரு மாதிரித் தேர்வு எழுதிப்பாருங்கள்.
3: என்சிஇஆர்டி வரையறை செய்த பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு தயார் செய்ய வேண்டும் என்பது நினைவில் இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கல்வியாளர்கள் 12ஆம் வகுப்பு பாடங்களை முதலில் படித்துவிட்டு பின் 11ஆம் வகுப்பு பாடங்களுக்குச் செல்லலாம் என்கிறார்கள். இப்படித்தான் படிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. ஆனால், பல ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு பாடத்திலிருந்து அதிக கேள்விகள் இடம்பெறுகின்றன. 12ஆம் வகுப்பு முடித்தவுடன் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த முறை எளிமையாகவும் இருக்கும்.
4: வாரத்துக்கு ஒருநாள் ஒதுக்கி முழுமையான மாதிரித் தேர்வை எழுத வேண்டும். அந்த நாள் சனி அல்லது ஞாயிறாக இருக்கலாம். அந்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வை எழுதி, விடைத்தாளை சோதித்து, மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதன் மூலம் எந்த இடங்களில் பலவீனமாக இருக்கிறோம் எனத் தெரிந்துகொள்ளலாம்.
5: சொந்தமாக ஒரு இலக்கை நியமித்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் இதைச் செய்வதே கிடையாது என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, 720க்கு 700 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நியமித்து அதற்கு ஏற்ப முயற்சி செய்யலாம். 700 மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்றாலும், 700க்கு முயற்சித்து 500 மதிப்பெண் பெற்றாலும் அது சிறப்பானதுதான்.
6: கேள்வித்தாள் அமைப்பு முறையைப் (pattern of question paper) பார்த்து எந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முடிவு செய்யலாம். உதாரணமாக, இயற்பியலில் காந்தவியல், வேதியியலில் மூலக்கூறு அறிவியல் போன்றவை கடினமானவை என்று நினைத்தால் அவற்றுக்கு மட்டும் கூடுதல் நேரம் ஒதுக்கி தெளிவாக படிக்க வேண்டும்




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive