மழலையர் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை
மாவட்ட செயற்குழுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு
மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் எதிர்கால
செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர் நரசிம்மன் பேசினார். கூட்டத்தில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மணவாளன், உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரேசன்
உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மழலையர் கல்வி பயிற்சி முடித்த
ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் 3ல் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தவாறு ஆடல், பாடல் மூலம் எளிமையான முறையில்
கல்வி வழங்க முடியும்.
இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். போதிய மாணவர்கள் இல்லாமல் அரசு பள்ளிகளை மூடும் அவலநிலை தடுக்கப்படும். எனவே, மழலையர் பயிற்சி முடித்த ஆசிரியர்களை தமிழக அரசு அறிவித்து உள்ள எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...