தெற்கு ரெயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு
கடந்த 23.2.2019 அன்று இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த
தேர்வுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் மட்டும்
விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு, என்ஜினீயரிங்
படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். இது
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
இந்த தேர்வு கணினி மூலமாகவே நடத்தப்படும்
என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான கிராமப் புறத்தை சேர்ந்த
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் கணினி இயக்குவதில் முறையான பயிற்சி பெறவில்லை.
அதுபோன்றவர்கள் இந்த தேர்வை எழுதுவதில் சிரமம் ஏற்படும். பட்டப்படிப்பு,
என்ஜினீயரிங் படித்தவர்களும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து, தேர்வு
எழுத அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது, “மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில்
நாடு முழுவதும் பல லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். இதில் தமிழ் மொழி
தேர்வில் தமிழே தெரியாத பலர் பங்கேற்று, அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வை உதாரணமாக கூறலாம். அந்த
தேர்வில் வடஇந்தியர்கள் பலர் பங்கேற்று, முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இது
எப்படி சாத்தியமாகிறது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் “டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்து,
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களை தேர்வு எழுத அனுமதிக்க
வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
நீதிபதிகள் மேலும் கூறுகையில், மேற்கண்ட
தேர்வு முடிவுகள் இந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாகும், இந்த
பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2009-க்கு முன்பாக, உள்ளூர் வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது தெற்கு
ரெயில்வே இந்த விதியை நீக்கியுள்ளது. இதேபோல இந்திய ரெயில்வே முழுவதிலும்
இந்த விதியை நீக்கியுள்ளார்களா, அமல்படுத்தி உள்ளார்களா? என ரெயில்வே
அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில்
கூறியுள்ளனர். பின்னர் விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழ்மொழியில் வினாத்தாள்
மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,“மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும்
யு.பி.எஸ்.சி. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தேர்வு
நடத்தப்படுகிறது. தொடக்கநிலை, முதன்மை நிலை, நேர்முகம் என 3 வகையான தேர்வு
நடைபெறுகிறது. தாய்மொழியில் வினாத்தாள் வழங்கப்படாததால், தேர்வு எழுதுவதில்
சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க, யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளின்
வினாத்தாளை தமிழ்மொழியிலும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்” என்று
கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர்
முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
பின்னர், இந்த வழக்கு குறித்து யு.பி.எஸ்.சி. ஆணையத்தின் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...