பள்ளிக் கல்வி இயக்குநர் நேற்று வெளியிட்ட
அறிக்கை:மருத்துவ படிப்புக்கான
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(NTA) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட்
தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மற்றும்.
இதற்கான ஹால்டிக்கெட்டுகள் 15ம் தே தி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
என என்டிஏ தெரிவித்துள்ளது. அதன்படி பதிவிறக்கம் செய்த ஹால்டிக்கெட்டுகளில்
ஏதாவது விவரங்கள் சரியாக இல்லை என்றால் அந்த ஹால்டிக்கெட்டுகளை அந்தந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.
அவற்றை ஸ்கேன் செய்து அதை பள்ளிக் கல்வி இணை இயக்குநர்(தொழிற்கல்வி)
மெயிலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்புவார்கள்.
ஹால்டிக்கெட்டின் நகல்கள் என்டிஏ மையத்துக்கு அனுப்பி அதில் உள்ள தவறான
விவரங்களை சரி செய்ய பள்ளிக் கல்வித்துறை ஆவன செய்யும். மாணவர்கள் தங்கள்
ஹால்டிக்கெட்டுகளை ஒப்படைத்த அடுத்த நாளில் இருந்து அதில் உள்ள விவரங்கள்
சரி செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து அதை பதிவிறக்கம் செய்து கொள்ள
வேண்டும்.