Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாறு படைத்த தமிழச்சி..! இரண்டே நிமிடத்தில் இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கோமதி - மலைக்க வைக்கும் பின்னணி..?




ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.
திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார்





Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive