Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று வெளியாக போகும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!!

தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தன இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  ஏப்ரல் 29 காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன

தமிழக மாணவர்கள் மேலும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள tamil nadu.indiaresults.com examresults.net/tamilnadu என்ற இணையதளப் பக்கத்தையும் காணலாம்.

மேலும் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் அனைத்து நுாலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய முடியும்

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

1. tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்.

2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்.

3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்.

4. பிறந்த தேதி பதிவிடவும்.

5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்

இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண்பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்

மாணவர்கள் மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண்சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வுமையங்கள் வழியாகவும் மே 2 முதல் 4 வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப் பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive