ஒருவரே இரண்டு முறை ஓட்டுபோடலாம்!
PROXY VOTE:
ராணுவத்தில் பணியாற்றுபவர்கள், தங்களது பெயர் உள்ள வாக்குச்சாவடி பகுதியில் அவரது வாக்கைப் மற்றொருவர் மூலம் பதிவு செய்யலாம்.
வாக்குரிமை வீரர் ஏற்கெனவே இதுகுறித்த விதிமுறையை கடைபிடித்து உரிய மனு செய்திருந்தால் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு செய்யும் உரிமை வழங்கப்படுகிறது.
யார் மூலம் (மனைவி அல்லது குடும்பத்தினர்) தனது வாக்கைப் பதிவு செய்ய விண்ணப்பித்தாரா அவர் முதலில் அவருடையை வாக்கைப் பதிவு செய்து விட்டு மீண்டும் வந்து ராணு வவீரரின் வாக்கைப் பதிவு செய்யலாம்.
49M RULE:
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து (17A) வெளியேற்ற வேண்டும்.
சேலஞ்ச்' ஓட்டு:
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம்.
அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2 ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம்.
சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2 ரூபாய் அரசுக்கு சொந்தம்;
சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 2 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.
TENDER VOTE:
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.
இவர்களை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.
BLINDER's VOTE:
கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள EDC சான்றை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம்.
வேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும்.
தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
கட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம்.