பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள், நாளை
வெளியாகின்றன. மதிப்பெண்களை மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., வழியாக,
மாணவர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச், 14 முதல், மார்ச், 29 வரை நடத்தப்பட்டது. தேர்வில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 12 ஆயிரத்து, 546 பள்ளிகளைச் சேர்ந்த, 4.76 லட்சம் மாணவியர் உட்பட, 9.60 லட்சம் பேர் மற்றும் 38 ஆயிரம் தனி தேர்வர்கள் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு, தேர்வு துறையால் வெளியிடப்படுகின்றன.
மாணவ -- மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், ஏற்கனவே வழங்கிய மொபைல்போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மேலும், www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டைபதிவு செய்து, மதிப்பெண்ணை பார்க்கலாம். மாவட்டவாரியாக கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து நுாலகங்களிலும், தேர்வு முடிவை தெரிந்துக் கொள்ளலாம். அவரவர் பள்ளிகளிலும், மதிப்பெண்ணை தெரிந்துக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, வரும், 2ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அவரவர் படித்த பள்ளிகளில்கிடைக்கும். தனி தேர்வர்கள், வரும், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் எப்படி?
மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுவோர், தங்கள் விடைத்தாளின் மதிப்பெண்ணை மறுகூட்டல் செய்துக்கொள்ளலாம். இதற்கு, வரும், 2ம் தேதி முதல், 4ம் தேதி மாலை, 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே, விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.
மறுதேர்வு
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு, ஜூன், 14 முதல், 22ம் தேதி வரை, சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.