Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல் ஐந்து இடங்களில் சறுக்கல் கல்வியில் தேய்கிறதா தெற்கு?

*பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் எப்போதும் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் தென் மாவட்டங்கள் அந்த இடங்களை இழந்து வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*
*நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வில் தென் மாவட்டங்களை பொறுத்தவரை 94.81 சதவீதத்துடன் கன்னியாகுமரி 6 வது இடத்தையும், கடந்த இரண்டு ஆண்டுகள் முதலிடத்தை பிடித்த விருதுநகர் 94.44 சதவீதத்துடன் 7வது இடத்தையும், திருநெல்வேலி 94.41 சதவீதத்துடன் 8வதும், துாத்துக்குடி 94.23 சதவீதத்துடன் 9 வது இடத்தையும் பெற்றுள்ளது*
*4வது இடத்தில் இருந்த ராமநாதபுரம் 16வது இடத்திற்கும், 6 வது இடத்தில் இருந்த சிவகங்கை 11 இடத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது*
*இது கல்வியாளர்களை அதிர்க்குள்ளாக்கியுள்ளது.கடந்தாண்டு 11வது இடம் வகித்த கன்னியாகுமரி மாவட்டம் தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது*
*கடந்த சில ஆண்டுகளாகவே திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது*
*மத்திய அரசின் 'நிடி ஆயோக்' அமைப்பு நடத்திய ஆய்வில் கல்வி, அடிப்படை வசதிகளில் தேசிய அளவில் வளர்ந்து வரும் 115 மாவட்டங்களில் விருதுநகர் இடம் பெற்றது*
*இதற்காக டிச.,26ல் 'மாற்றத்தின் சாதனையாளர் விருது' விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் பின்தங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive