அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்
கல்லூரிகளில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இணையதள முகவரி
வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 , முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில்உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் , அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான இணையதளம் முலம் விண்ணப்பிக்கலாம். https://www.tneaonline.in , http://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தின் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழ்நாடுபொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அது குறித்தும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் விண்ணப்பத்தின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய இணையதளம் முலம் செலுத்தலாம். ஆன்லைன் முலம்பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை டிடி யாக எடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் அளிக்கலாம்.
கலந்தாய்வு விவரங்கள் , வழிகாட்டிகள் மற்றும் கால அட்டவணை விபரங்களை இணையதளம் மூலம் மட்டுமே அறிந்துக் கொள்ள முடியும். ஆன்லைன் முலம் மே 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பு தேதி , நேரம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் ஆகிய விபரங்களை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி , நேரம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் ஆகிய விபரங்களை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பின் போது மாணவர்கள், உரிய நாட்களில் விண்ணப்பப் படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள்சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டுமே நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கானகலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டுமே நடைபெறும் . இது குறித்த பிற விபரங்களுக்கு 044-22351014 , 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.