இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை
முடிக்கவேண்டிய நிர்பந்தம் பலருக்கும் உண்டு. அலுவலகத்திற்கு செல்லும்
பெரும்பாலோனோர் போட்டி நிறைந்த சூழலில் பணிபுரிவதால் மன அழுத்தம்
ஏற்படுகிறது. பணமும், இன்றைய ஆடம்பார வாழ்க்கைச் சூழலும் கூட மன அழுத்தத்தை
நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.. நமக்கு
ஏற்படும் மன அழுத்தத்தை விரட்ட எளிய பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் சொல்லி
உள்ளனர்.
மன அழுத்தம் அதிகமாகும் சமயத்தில், செய்யும் வேலையில் இருந்து சிறிதுநேரம் இடைவெளி விடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மரங்கள் அடர்ந்த சோலையில் சில நிமிடங்கள் நடக்கலாம் அல்லது ஓய்வறைக்கு சென்று சிறிது தண்ணீர் அருந்தலாம். இதனால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்பது அவர்களின் கருத்து.
ஆழமாய் சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை விரட்ட முடியும் என்று பல்வேறு நாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகடள தளர்வடைகின்றன. மனமும் இயல்பு நிலையை அடைகின்றன. அடிவயிற்றில் கையை லேசாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழமாய் சுவாசிக்கவும் அப்பொழுது அடிவயிற்றின் அசைவுகளையும், மனமும், உடலும் லேசாக மாறுவதையும் உணரலாம்.
மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்பு. பற்களை இறுக கடித்தபடி காதுக்கு கீழ் சுட்டுவிரலால் அழுத்தவும். நீளமாக மூச்சை உள்ளிழுத்து அதனை வாய் வழியாக வெளியேற்றவும். மனஅழுத்தத்தின் சுவடுகள் உடலில் தங்காமல் வெளியேறிவிடும்.
மன அழுத்தம் போக்குவதில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. மன அழுத்தம் காரணமாக அதீத டென்சன் ஏற்படும் போது மனதிற்கு பிடித்த பாடலை ஹெட்போன் மூலம் கேட்கலாம். இதனால் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து போகும் மனம் அமைதியாகும். எனவே கையோடு ஹெட்போன் வைத்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பை குறைக்கும் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டென்சன், மன உளைச்சல், மன அழுத்தம் நெருங்காமல் இருக்க தினமும காலையில் வாக்கிங் செல்லுங்கள்.
டென்ஷனை குறைச்ச சில உணவு வகைகள்
முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென்ஷனும் குறையும்.
ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும்; கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம்.
வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும்.
ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம்.
மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும்.பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும்.