ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் பி.எஸ்சி. நர்சிங் மற்றும் துணை மருத்துவ
படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் நேற்று
துவங்கியது.புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில்,
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு தனி நுழைவு தேர்வு நடத்தப்பட்டு, சேர்க்கை
நடக்கிறது. அதுபோல், இக்கல்லுாரியில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் மற்றும் துணை
மருத்துவ படிப்புகளுக்கும் ஆன்லைன் நுழைவு தேர்வு நடத்தி, சேர்க்கை
நடக்கிறது.இந்தாண்டிற்கான நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான
ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கியது.
ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 75 இடங்களும், பி.ஏ.எஸ்.எல்.பி.,
பாட பிரிவில் 4 இடங்கள் உள்ளன.பி.எஸ்.சி., மயக்க மருந்து டெக்னாலஜி,
கார்டியோ லேபரட்டரி டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரத்த வங்கி டெக்னாலஜி,
ரேடியோ டைகனாஸ்டிக் டெக்னாலஜி, நியூரோ டெக்னாலஜி, நியூக்லியர் மெடிசன்
டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி, பெர்ப்ஷன் டெக்னாலஜி, ரெடியோதெரபி டெக்னாலஜி ஆகிய
பாடப் பிரிவுகளில் தலா 4 இடங்கள் உள்ளன. எம்.எல்.டி. பாடப்பிரிவில் 30
இடங்கள், கிளினிக்கல் நியூட்ரிஷன் பாடப்பிரிவில் 4 சீட்கள் உள்ளன.
மொத்தமுள்ள 153 இடங்களில், நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட
உள்ளனர்.www.jipmer.edu.in என்ற இணையளத்தில், மே 24ம் தேதி மாலை 5:00 மணி
வரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவு தேர்வு முடிவு, ஜூலை 5ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்பட
உள்ளது.விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா எண்
18002667072 மற்றும் ஜிப்மர் அகாடமிக் பிரிவு 0413-2298288, 2272380 என்ற
தொலைபேசியில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணமாக அகில இந்திய மற்றும் புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓ.பி.சி.
மாணவர்களுக்கு ரூ.1500, எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.1200 கட்டணமாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.ஆன்லைன்
நுழைவு தேர்வு, ஜூன் 22ம் தேதி, காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை ஒரே
ஷிப்டில் நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை, ஜூன் 10ம் தேதி முதல்
22ம் தேதி காலை 8:00 மணி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.