Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூகுள் வழங்கும் மாணவிகளுக்கான இலவச ஆன்லைன் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

கூகுள் நிறுவனம் கல்லூரி மாணவிகளுக்கு முழுமையான கல்வி உதவித்தொகையுடன் ஓராண்டு சாப்ட்வேர் எஞ்சினியரிங் படிப்பை வழங்குகிறது*
*தொழில்நுட்பத்துறையில் பெண்களுக்கு சம வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 600 பெண் சாப்ட்வேர் எஞ்சினியர்களை உருவாக்க முயல்கிறது. இதற்காக டேலண்ட் ஸ்பிரிண்ட் (TalentSprint) என்ற ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்துடன் இணைந்துள்ளது*
*முதல் கட்டமாக 100 கல்லூரி மாணவிகளுக்கு ஓராண்டுக்கு சாப்ட்வேர் எஞ்சினியரிங் படிப்பு ஆன்லைன் மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத்துடன் உதவித்தொகையாக ரூ.1 லட்சமும் கொடுக்கப்படுகிறது*
*♦♦முக்கிய தேதிகள்*
*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – மே 10, 2019*
*ஆன்லைன் தேர்வு நடத்தும் நாட்கள் – ஏப்ரல் 20 முதல் மே 15, 2019*
*நேர்முகத் தேர்வு நடத்தும் நாட்கள் – மே 1 முதல் 18, 2019*
*தேர்வானதும் படிப்பில சேர்வதற்கான அவகாசம் – மே 20 முதல் 27, 2019*
*தகுதி*
*2020 அல்லது 2021ஆம் ஆண்டில் B.E., B.Tech, M.Sc., MCA படிப்புகளை முடிப்பவராக இருக்க வேண்டும்*
*IT, CSE, ECE, EEE, Maths, Applied Maths போன்ற துறைகளையோ இவற்றுக்கு நிகரான துறைகளையோ தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்*
*11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 70% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்*
*♦♦தேர்வு முறை*
*ஆன்லைன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கூகுள் ஹேங்அவுட் (Hangout) மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்*
*அதன் அடிப்படையில் தகுதியான 100 மாணவிகள் தேர்வுசெய்யப்படுவர்*
*இந்த ஓராண்டு பிடிப்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே. இப்படிப்பில் கூகுள் நிறுவனத்தில் மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் பெற முடியும். கூடவே கூகுள் நிறுவனத்தில் வேலையைப் பெறும் வாய்ப்பும் கிடைக்குலாம் என்பது குறிப்பிடத்தக்கது




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive