Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடப்புத்தகங்களின் விலை உயர்வு

புதிய பாடப்புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.  அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம்  செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1, 3, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.இந்த ஆண்டு 2, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடபட்டுள்ள இந்த பாடப்புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புத்தகங்களுக்கான  விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
அதன்படி 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.30, 56-72 பக்கம் கொண்டு புத்தகத்துக்கு ரூ.40, 76-92 பக்கம் கொண்டு புத்தகம் ரூ.50, 96-116 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.60, 120-136 பக்கம் கொண்டு புத்தகம் ரூ.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப்புத்தகத்தின் விலை ரூ.180 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive