சுமார் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஒரே நாளில் வாக்களித்த நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 17-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்றது. எட்டு லட்சம் வாக்குச்சாவடிகள், 60 லட்சம் பணியாளர்கள், 2 லட்சம் வேட்பாளர்கள், 80% வாக்குப்பதிவு என மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிந்து பத்து நாள்களே ஆன நிலையில் அந்நாட்டு அரசு தற்போது ஒரு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக ஒரே நாளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாக்குப்பதிவின் விளைவாகப் பணி சுமை மற்றும் அதைச் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு தேர்தல் பணிகளை செய்த 272 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்
மேலும் 1,878 ஊழியர்கள் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான வாக்குச்சிட்டுகளை தங்கள் கைகளால் எண்ணிச் சோர்வடைந்துள்ளனர். இதனால் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறும் நிலையிலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி தர அந்நாட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...