டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா 2019 மக்களவை தேர்தல் தேதி மற்றும் தேர்தல் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11
2-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18
3-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 23
4-வது கட்ட தேர்தல் - ஏப்ரல் 29
5-வது கட்ட தேர்தல் - மே 6
6-வது கட்ட தேர்தல் - மே 12
7-வது கட்ட தேர்தல் - மே 19
வாக்கு எண்ணிக்கை - மே 23
நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, துவங்கியது.முதல் வாக்கை பதிவு செய்தனர், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர்.
அருணாசல பிரதேசத்தில் உள்ள லோகித்புர் மலை கிராமத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்தனர், பாதுகாப்பு படையினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...