திருக்குறள்
அதிகாரம்:தீவினையச்சம்
திருக்குறள்:208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
விளக்கம்:
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
பழமொழி
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்
Diamond cuts diamond
இரண்டொழுக்க பண்புகள்
1.பயணம் செய்யும் போது தேவை படுவோருக்கு எழுந்து இடம் கொடுப்பேன்
2. நீரை மிக சிக்கனமாக உபயோகிப்பது மட்டும் அல்ல அதை சேமிக்கவும் முயல்வேன்
பொன்மொழி
கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
- காந்தியடிகள்
பொது அறிவு
1.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பால்
2. செந்தமிழ் ஞாயிறு என அழைக்கப்படும் தமிழ் அறிஞர் யார்?
தேவநேயப் பாவாணர்
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. *சாக்லேட்:* சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், தூக்கம் பாதிக்கப்படும். இப்படியான நிம்மதியற்ற தூக்கம் தொடர்ந்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) அளவு அதிகரித்து திசுக்கள் உடைய நேரிடும். மேலும், காஃபின் செரிமானத்தைப் பாதித்து அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
2. *பாஸ்தா:* பாஸ்தா அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்தது. இது உடலின் அதிகப்படியான இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. அதிக அளவு கலோரியை கொண்ட பாஸ்தா, உடலின் தசை செல்களுக்குள் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
3. *நீர்ச்சத்துள்ள உணவுகள்:* பூசணி, புடலை, சுரக்காய், பாவைக்காய், கோவைக்காய், தர்பூசணி, செளசெள போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை இரவில் சாப்பிடும்போது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வகை உணவுகளை இரவில் சாப்பிடவே கூடாது.
English words and Meaning
Lateral. பக்கவாட்டான
Internal. உட்புறமான
Logical. அறிவான
Mechanical. இயந்திரத்தனமான
Musical. இசையான
அறிவியல் விந்தைகள்
தட்டாரப்பூச்சி
*தட்டாரப்பூச்சி அல்லது தட்டான் என்பது நீர்நிலைகளுக்கு அருகே காணப்படும் கண்ணைக் கவரும் பூச்சிக் குடும்பங்களின் அழகான, ஒல்லியான, பறக்கும் பூச்சித் தனியன்களாகும். *தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்பூச்சி வகைகளைத் தும்பி என்றும் அழைக்கிறார்கள். இவற்றைத் தட்டாம்பூச்சி என்றும் அழைப்பர்.
* இவற்றின் இறக்கைகள் வலைபோலவும் மிகமிக மெல்லிய, கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாகவும் இருக்கின்றன.
*இந்தியாவில் 503 தட்டான் இனங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
*நீருக்குள்ளேயே தன் வாழ்க்கையை ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை வாழும். அப்பொழுது இதற்கு இறக்கைகள் இருக்காது.
Some important abbreviations for students
* NIT - National Institute of Technology
* NIO - National Institute of Oceanography
நீதிக்கதை
இந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை என்று, கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஆகியவை ஒருபோதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்: ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.
தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட தோல் வேலை செய்பவர் , இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூசாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.
இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்கு காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.
இன்றைய செய்திகள்
13.04.2019
* தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மையங்களில் செல்பி எடுக்க அனுமதி இல்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
* சென்னை குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோடைகாலத்தில் முதன்முறையாக வீராணம் ஏரி நிரம்பியது.
* சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வருவதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
* மலேசியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி 5 ஆட்டங்களிலும் வென்று தொடரை கைப்பற்றியது.
* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
Today's Headlines
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌸In Tamil Nadu selfies is not been allowed to take in the polling centers: Chief Electoral Officer
🌸 The water from the Mettur Dam to veeranam lake for Chennai drinking water has been opened and was Full for the first time in summer.
🌸 UN figures show that India's population growth is twice than China .The report has been exposed.
🌸 Against Malaysia: Indian women's team won in 5 games and won the series.
🌸 Singapore Open Badminton: PV Sindhu advanced to semifinal
🌹🌹🌹🌹🌹🌹🌹
🎊Happy Holidays 🎊
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...